×

வெ.இண்டீசுக்கு எதிரான 2வது டெஸ்ட்: 109 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி

ஜமைக்கா: வெஸ்ட் இண்டீஸ்- பாகிஸ்தான் அணிகள் இடையே 2வது டெஸ்ட் ஜமைக்கா கிங்ஸ்டன்  மைதானத்தில் நடந்தது. இதில் முதலில் ஆடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு  302 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக பவாத் ஆலம் 124 ரன் எடுத்தார். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட்இண்டீஸ் 150  ரன்னுக்கு ஆல்அவுட் ஆனது. பாகிஸ்தான் பந்துவீச்சில் ஷாகின் ஷா அப்ரிடி 6  விக்கெட் வீழ்த்தினார். தொடர்ந்து 152 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 27.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன் எடுத்து  டிக்ளேர் செய்தது.

இதையடுத்து, 329 ரன் என்ற இலக்குடன் 2வது  இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் 4வது நாள் முடிவில் ஒரு விக்கெட்  இழப்பிற்கு 49 ரன் எடுத்திருந்தது. கடைசி நாளான நேற்று அல்ஜாரி ஜோசப் 17,  கேப்டன் பிராத் வெயிட் 39, கைல் மேயர்ஸ் 32, சேஸ் 0, பொன்னர் 2, பிளாக்வுட்  25 , ஜோசுவா டி சில்வா 15 ரன்னில் ஆட்டம் இழந்தனர். கடைசி விக்கெட்டாக  ஜேசன் ஹோல்டர் 47 ரன்னில் அவுட் ஆனார். 83.2 ஓவரில் 219 ரன்னுக்கு வெஸ்ட்  இண்டீஸ் ஆல்அவுட் ஆனது. இதனால் 109 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி  பெற்றது.

பாகிஸ்தான் பந்து வீச்சில் ஷாகின் ஷா அப்ரிடி 4 விக்கெட்  வீழ்த்தினார். அவருக்கு ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன் விருது  வழங்கப்பட்டது. இந்த வெற்றி மூலம் 1-1 என பாகிஸ்தான தொடரை சமன்  செய்தது. இந்த வெற்றியால் 12 புள்ளிகள் பெற்ற பாகிஸ்தான் டெஸ்ட்  சாம்பியன்ஷிப் பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது. இந்தியா 14  புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

Tags : Indies ,Pakistan , 2nd Test against West Indies: Pakistan win by 109 runs
× RELATED வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில்...